பதிவு செய்த நாள்
12
நவ
2021
03:11
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், நாளை 13ம் தேதி குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், நாளை 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு, மகரராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.அன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.அதில், குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணா மூர்த்தி ஹோமம் நடக்கிறது.மகா பூர்ணாஹூதிக்கு பிறகு, ராசி பரிகார ஹோமம், 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடக்கி றது. மாலை 3:00 மணிக்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்துள்ளனர்.