தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்: பாரதி தீர்த்த சுவாமிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2012 10:07
சென்னை: அனைவரும் தர்ம சிந்தனையுடன் வாழவேண்டும் என்று பாரதி தீர்த்த சுவாமிகள் பேசினார். சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமி சென்னை யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மயிலாப்பூர் சுதர்மா இல்லத்துக்கு வந்தார். அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற விழாவில் சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் பேசியதாவது: சாதுர் மாஷ்யம் நாளை (3ம் தேதி) துவங்குகிறது. சாதுர் மாஷ்யத்தில் அஹிம்சையை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதால், இங்கேயே மூன்று மாதங்கள் தங்கியிருப்பேன். என்னுடைய குருநாதர் அபினவ வித்யாதீர்த்த சுவாமிகள், கடந்த, 52 வருடங்களுக்கு முன் சாதுர் மாஷ்யத்தில் சென்னையில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதன் பிறகு, தற்போது நான் சாதுர் மாஷ்யத்தில் சென்னை வந்துள்ளேன். எல்லோரும் தர்ம சிந்தனையுடன் வாழ, இறைவனை வேண்டி, உங்களை ஆசிர்வதிக்கிறேன். இவ்வாறு பாரதி தீர்த்த சுவாமிகள் பேசினார். இதையடுத்து இரவு 8.30 மணிக்கு சாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடைபெற்றது. சுதாரகுநாதன் இறைவணக்கம் பாடினார். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள், கிருஷ்ணமூர்த்தி, சமஸ்கிருத கல்லூரி செயலர் மாதவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.