பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
திருவள்ளூர்: மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ வழிபாடு விழா கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில், கூவம் திருபுராந்தக ஈஸ்வரர், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர், எலுமயன்கோட்டூர் அரும்பேஸ்வர நாதர், தக்கோலம் ஜலநாத ஈஸ்வரர் உட்பட, சிவன் கோவில்களில், நேற்று மாலை, பிரதோஷ விழா நடந்தது. இதேபோல் பள்ளிப்பட்டு அடுத்த, கரீம்பேடு நாதாதீஸ்வரர், பொன்னேரி அகத்தீஸ்வரர், தாராட்சி பரதீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் நேற்று பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.