திருப்புத்தூர் ககோளபுரீஸ்வர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2012 10:07
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோளக்குடியில் ஆத்மநாயகி அம்பாள் ககோளபுரீஸ்வர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோவிலில் ஆனி திருவிழா ஜூன் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதற்காக, காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ககோளபுரீஸ்வரர், ஆத்மநாயகி, முருகன் எழுந்தருளினர். சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலை 10.30 மணிக்கு பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மாட வீதிகளை சுற்றி பகல் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது.