உலக நன்மை வேண்டி ராசி மண்டல குருபகவானுக்கு மகா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2021 11:11
காரைக்கால்: உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு மகா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார்.குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நேற்று முன்தினம்பெயர்ச்சி அடைந்தார்.குரு பெயர்ச்சி யொட்டி உலக நன்மை வேண்டி இக்கோவிலில் ஆண்டுதோறும் மகாயாகம் நடைபெறும்.இந்தாண்டு நடைபெற்ற மகாயாகத்தை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை தொடங்கியது.நேற்று காலை 8மணிக்கு துவங்கி 11மணி வரை குருபெயர்ச்சி மகா யாகம் நடந்தது. இதில் அனைத்து ராசிகளுக்கு அஸ்வதி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை உள்ள 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரர்த்தனை நடந்தது.பின் மகா பூர்ணாஹீதி,தீபாரதனையும் அதைத்தொடர்ந்து குரு பகவானுக்கு 30திரவங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகமும்.மகா தீபாரதனை நடந்தது.யாகத்தை அகில இந்திய ஆதீசைவ சிவாச்சாரியர் சேவா சங்க மூலம் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் கோவில் குருக்கள் ராஜா மற்றும் குமார் குருக்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூந்தோட்டம் ராசிமண்டல குருபகவான் நற்பனி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.