சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
குருபகவான் நவ.13 ம் தேதி மாலை 6:20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்தார். இதையொட்டி சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவானுக்கு 2 நாட்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் சாமி காட்சி அளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார். சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், பிரான்மலை மங்கைபாகர் கோயில்களிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது.