பதிவு செய்த நாள்
15
நவ
2021
02:11
விருதுநகர் : விருதுநகர் ரோசல்பட்டி அருகே இந்திரா நகர் குடியிருப்பில் நடந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
யாகசாலை பூஜையில் பங்கேற்று அமைச்சர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வழிபட்டார்.பின் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள காமராஜ் மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் காமாட்சி இருவருக்கும் கமலபுஷ்ப விருது வழங்கினார்.மாவட்ட தலைவர்கள் கஜேந்திரன், ராதாகிருஷ்ணன், பெண்டகன் குழுமம் பாண்டுரங்கன், ஜவஹர், தொழிலதிபர் காந்திநகர் மணிகண்டன், மாவட்ட பொது செயலாளர் கரந்தமலை, பொன்ராஜன், கோட்ட பொறுப்பாளர் செந்தில், வர்த்தக அணி தலைவர் சுப்புராஜ், சிறுபான்மையினர் அணி துணை தலைவர் பிரான்சிஸ், தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் செல்வக்குமார், ஆர்.எஸ்.எஸ்.,தென்பாரத தலைவர் வன்னியராஜன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் காளீஸ்வரி, நகர தலைவர் புஷ்பகுமார், ஒன்றிய தலைவர் பார்த்தசாரதி,ஓ.பி.சி., அணி நகர தலைவர் நாகராஜன் பங்கேற்றனர்.