கரிசல்பட்டி பீர்மஸ்தான் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2012 11:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி பீர்மஸ்தான் ஒலியுல்லா தர்காவில் சந்தன கூடு விழா நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இந்து, முஸ்லிம் பக்தர்கள் சந்தனகூடு விழாவிற்கு மல்லிகை பூ கொடுத்து, சர்க்கரை பாத்தியா ஓதி நேர்த்தி செலுத்தினர். கரிசல்பட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் சந்தனக்குட தொட்டில் அலங்காரம் செய்தனர். நாட்டாண்மை சலீம், ஷாஜஹான் ஆகியோர் தலைமையில், பழைய பள்ளி வாசலில் இருந்து சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. ஊராட்சி தலைவர் பழனி, துணை தலைவர் ரகமத்துல்லா பங்கேற்றனர். நேற்று காலை 6 மணிக்கு தர்காவில் அனைவருக்கும் சந்தனம் வினியோகிக்கப்பட்டது. இந்து,முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க விழாவாக சந்தனக்கூடு விழாவை நடத்தினர். திருப்புத்தூர் டி.எஸ்.பி., மதுரைச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.