ஐயப்பன் வரலாற்றை ‘சாஸ்தா பாட்டு’ என்ற பெயரில் மலையாளத்தில் பாடுவர். இந்தப் பாடலில் ஐயப்பனை ஒரு போர் வீரனாக சித்தரிப்பர். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்பவர்கள் துணை நின்றதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. ‘சேவம்’ என்றால் ‘சேவகம்’. பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர். சனி தோஷம் தீர இந்தப் பாடலைப் பாடச் சொல்வர்.