கார்த்திகையில் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற மந்திர ஒலி கேட்கும். மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் காலையிலும், மாலையிலும் நீராடி இந்த மந்திரத்தை சப்தமாக உச்சரிப்பர். ஐயப்ப பக்தர்களின் உயிர் மூச்சான இதிலுள்ள ‘சரணம்’ என்பதிலுள்ள நான்கு எழுத்துக்களும் மந்திரத்தன்மை கொண்டதாகும். ‘ச’ என்பது காமம் உள்ளிட்ட தீய எண்ணத்தை அழிக்கவும், ‘ர’ என்பது உலக வாழ்வு நிலையற்றது என்ற ஞானத்தை தரவும், ‘ண’ என்பது அமைதியையும், ‘ம்’ என்பது மகிழ்ச்சியைத் தர வல்லதாகவும் இருக்கிறது.