சபரிமலை பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். கருப்பு, நீல நிறத்தில் வேட்டி, சட்டை அணியலாம். கார்த்திகை மாதப்பிறப்பன்று குருநாதர், கோவில் அர்ச்சகர் அல்லது பெற்றோர் கைகளால் மாலை அணிய வேண்டும். தினமும் அதிகாலையிலும், மாலையிலும் நீராடி 108 முறை சுவாமியே சரணம் ஐயப்பா என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். விரத காலத்தில் அன்னதானம் செய்வது நல்லது. புகை, மது, உள்ளிட்ட பழக்கங்களை விட வேண்டும். கோயிலுக்கு சென்று வந்த பிறகும் தொடரக் கூடாது. குழுவாக சேர்ந்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பஜனை நடத்தலாம். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் பக்தர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.