உடல்நிலை, மனநிலை பற்றி நினைத்துப் பார்க்கிறோமா.. இல்லை. கெடுதல் என்று தெரிந்தும் அதை கைவிடாமல், நல்லது என தெரிந்தும் அதை செய்யாமல் இருக்கிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கை யாருக்கு சுகம் தரும். முதலில் உங்களுக்கு என்ன தேவை, தேவையில்லை என தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மீது அன்பு கொள்ளுங்கள். அப்போதுதான் குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் மீதும் அன்பு காட்ட முடியும். அனைவரும் இப்படி நடந்து கொண்டால் பிரச்னையே வராது. நம் நன்மையே சமுதாய நன்மை.