பதிவு செய்த நாள்
16
நவ
2021
04:11
திருச்செந்துார்: திருச்செந்துார், சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்துக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயிலில், வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம், தீபாராதனை, விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும், வருஷாபிஷேக கும்பாபிஷேகமும் நடந்தது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. இதில், சைவ வேளாளர் ஐக்கிய சங்கதலைவர் ஜெயந்திநாதன், செயலாளர் சந்தணராஜ், பொருளாளர் ஞானசுந்தரம், நிர்வாகஸ்தர்கள் வேலுமணி, பொன் முருகேசன், முன்னாள் செயலர் மெய்கண்டமுத்து, தொழிலதிபர் நாராயணபிள்ளை, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் (பணி நிறைவு) சங்கர், பாண்டியன் கிராமவங்கி மானேஜர் (பணி நிறைவு) சோமுசுந்தரம், செந்துார் அனைத்து வியாபாரிகள் சங்கபொருளாளர் கார்க்கி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.