சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2021 04:11
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய மலை ஏற அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில். நேற்று முன்தினம் இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். அவர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் தாணிப்பாறை கேட் முன்பு சூடம் ஏற்றி மலையை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் கோயிலில் நேற்று மாலை பக்தர்களில் இன்றி பிரதோச வழிபாடு நடந்தது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் பிரதோஷ பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.