திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவின் எட்டாம் நாள் காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரம்கால் மண்டபம் அருகே பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும், மஹா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாதுணிக்கு சமந்த விநாயகர் சன்னதி முன் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.