ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை சொக்க பானை விழா மூகூர்தக்கால் வைபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2021 05:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கார்திகை மாதம் 1-ம் தேதி (17.11.2021) காலை 10.45 - 11.30 மணிக்குள் திரு கார்த்திகை சொக்க பானை திருவிழாவிற்கான மூகூர்தக்கால் நடும் வைபம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திருகார்த்திகை கோபுரம் அருகில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் , வருகிற வெள்ளிக்கிழமை கார்திகை மாதம் -3 -ம் தேதி (19.11.2021 ) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்ரீ நம்பெருமாள் சொக்க பானை கண்டருள்வார் .