ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.
ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை நடந்த நிகழ்ச்சியில் நந்திதேவருக்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை யுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் சொக்கர் கோயில், அம்பல புளி பஜார் குருசாமி கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், பறவை அன்னம் காத்தருளிய கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதன் கோயில், சத்திரப்பட்டி புதுத்தெரு தண்டாயுதபாணி கோயில், வேதாந்த மடாலயம் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு நடந்தது.