புதுச்சேரி : முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது.இதனை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், குபேர ஹோமம், லட்சுமி ஹோமத்தை தொடர்ந்து பால்குட அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்துதல், கூழ் வார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.