பதிவு செய்த நாள்
18
நவ
2021
05:11
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவக்கினர். வல்லபை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 5:00 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள்,நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா மூலவர்கள் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.கோயில் தலைமை குருசாமி மோகன் கூறியது:கார்த்திகை 1 முதல் மார்கழி வரையுள்ள 60 நாட்களும் இரவு நேரத்தில் பஜனையும் ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடக்க உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும்மேலாக பிளாஸ்டிக் விழிப்புணர்விற்காகஇருமுடிப் பையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ளவர்களும்,41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்பவர்களுக்கும் இருமுடி கட்டுவதில்லை.
சபரிமலையில் கடைப்பிடிப்பதைபோன்ற சுயகட்டுப் பாடு, ஒழுக்க நெறி போதிக்கப்படுகிறது என்றார்.ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.சாயல்குடி: அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின்சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் சுற்று வட்டார பக்தர்கள்மாலையணிந்து விரதத்தை துவக்கினர். கோயில் கமிட்டியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சிக்கல் சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் குருநாதர் தலைமையிலும், கடலாடி சபரித்தோட்டம்ஐயப்பன் கோயிலில் குருநாதர் கருப்பையா, மகேந்திரபாண்டியன் முன்னிலையிலும் பக்தர்கள் மாலையணிந்து கொண்டனர்.திருவாடானை, தொண்டி, நம்புதாளை, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள்குருசாமியிடம் ஆசி பெற்று மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருவாடானை, சின்னக்கீரமங்கலத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.தேவிபட்டினம் நவபாஷாண திருக்கோவில்கடல் பகுதியில் புனித நீராடி, விநாயகர்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். இதே போன்று உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், அதிகாலை முதல் ஏராளமான ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் துவங்கினார்.முதுகுளத்துார் பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.காலை 5 மணிக்கு கணபதி ேஹாமம் தொடங்கி பால்,பன்னீர், சந்தனம், தேன் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் நடந்தன.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பின்பு பக்தர்கள் குருநாதர் முன்னிலையில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.