திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2021 07:11
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் அலங்காரத்தில் பால் சுனை கண்ட சிவபெருமான் அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முருகனுக்கு நேற்று மாலை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ச்சியாக மலைமேல் தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.