கோத்தகிரி: நீலகிரியில் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவுக்கான விரதம் துவங்கியது.
கோத்தகிரி மற்றும் தொததநாடு பகுதியில் சக்கலாத்தி பண்டிகையுடன், ஒருசேர லச்ச தீபம் பண்டிகை நேற்று நிறைவடைந்ததது. படுக மக்கள் வசிக்கும் கிராமங்களில் காப்பு கட்டப்பட்டு, வாசலில் கோலம் வரைந்து, வீடுகளில் இருந்து சேகரித்த உணவுவகைகள் முன்னோர்களுக்கு படையல் வைக்கப்பட்டது. அத்துடன், ஒருசேர கோவில் கல்தூணில் லட்ச தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த பண்டிகை நிறைவடைந்த நிலையில், டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழாவுக்கான விரதம் துவங்கியது. ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள அனைத்து கிராமங்களிலும், செங்கோல் பக்தர்கள் உட்பட, குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், 48 நாட்கள் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.