பதிவு செய்த நாள்
22
நவ
2021
03:11
பாளை: பாளை அருகே மேலக்குளத்தில் ராஜஸ்ரீ வரசித்தி விநாயகர், அஷ்டபுஜ தவயோக வன வாராஹி, கால பைரவர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் நேற்று துவங்கின.
பாளை அருகேயுள்ள கீழநத்தம் பஞ்., மேலக்குளத்தில் நெலலை - தூத்துக்குடி ரோட்டில் சாரதா கல்லூரி அருகில் ராஜஸ்ரீ வரசித்தி விநாயகர், வன வாராஹி கோயில் கட்டப்பட்டுள்ளது . கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ப்ரதிஷ்டா மகா ம், ஹோமங்கள், மாலையில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தன. இன்றும் (22ம் தேதி), நாளை(23ம் தேதி) யாகசாலை பூஜைகள், புதிய விக்ரகங்களுக்கு கண் திறக்கும் நிகழ்வு, பிம்ப சுத்தி, அஷ்ட பந்தனம் நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு ஸ்பர்சாஹூதி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை, திருக்குடங்கள் புறப்பாடு, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.