திருவண்ணாமலை : திருவண்ணாமலை மஹா தீபத்தை ஸ்டாலின் மனைவி துர்கா வழிபட்டார்.
தீப விழாவுக்கு பின், 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மஹா தீபத்தை தரிசிப்பதை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு, மஹா தீபத்தை வழிபட்டார். கோவில் குருக்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்து, பிரசாதங்கள் வழங்கினர்.