விழுப்புரம் : விழுப்புரம் வி.மருதூர் ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ருத்ர ஹோமம் நடந்தது. விழுப்புரம் வி.மருதூர் ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஆனிமாத ஏகாதசி விழா நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு உலக நன்மைக்காக ருத்ர ஹோமம் நடந்தது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.