விழுப்புரம் : விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு ஆதிவாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் , தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது.