பதிவு செய்த நாள்
25
நவ
2021
02:11
சதுரங்கப்பட்டினம் : சதுரங்கப்பட்டினம் வெள்ளீஸ்வரர் கோவில் மற்றும் காஞ்சிபுரம் ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் - மெய்யூர் பகுதியில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை,
ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வகிக்கும் கோவிலாக, வேதாம்பிகை உடனுறை வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது.இதன் கும்பாபிஷேகம் 2007ல் நடந்து, 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, திருப்பணிகள் மேற்கொள்ள, உயர் நீதிமன்ற அங்கீகார குழுவிடம் அனுமதி பெறப்பட்டது.தற்போது ௭ லட்சம் ரூபாய் மதிப்பில் இப்பணிகள் முடித்து, கொடிமரத்திற்கு பித்தளை கவசம் தனியே அமைக்கப்பட்டது.கடந்த 21ம் தேதி, விநாயகர் வழிபாட்டுடன், யாகசாலை வழிபாடு துவங்கி, நேற்று, அனைத்து சன்னிதிகள் மற்றும் சுவாமியருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். lகாஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில், நெல்லுக்கார தெருவில் ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவில் உள்ளது.பழமையான இக்கோவிலை, பெரிய காஞ்சிபுரம் வாணிபர் தர்ம பரிபாலன சங்கம் சீரமைத்தது. புதிதாக பெருமாள், பாலகணபதி, பாலமுருகன், பைரவர் ஆகியோருக்கு சன்னிதிகளும் அமைத்தது.ராஜகோபுரம் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிந்தது. கடந்த 21ல் கணபதி ஹோமம் துவங்கியது. நேற்று காலை 10: 30மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.