பதிவு செய்த நாள்
25
நவ
2021
02:11
ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மனைவி சாதனா சிங்குடன் தரிசனம் செய்தார்.நேற்று காலை 10:30 மணிக்கு கோயிலுக்கு வந்த முதல்வருக்கு தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் மரியாதை செய்து வரவேற்றனர். மணவாளமாமுனிகள், ஆண்டாள் சன்னதி, ஆண்டாள் நந்தவனம், வடபத்சயனர் கோயிலில் நரசிம்மர், பெரிய பெருமாள் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.நந்தவனத்தில் மரக்கன்று நட்ட சிவராஜ் சிங் சவுகான், முறையாக பராமரிக்குமாறு கோயில் செயல் அலுவலரிடம் கேட்டுக்கொண்டார்.நிருபர்களிடம் அவர், கொரோனா முற்றிலும் ஒழிந்து மத்திய பிரதேச மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும், இந்திய மக்களும் சுபிட்சமாக வாழ ஆண்டாளிடம் வேண்டி கொண்டதாக, கூறினார்.