சென்னிமலை: சென்னிமலை, கைலாசநாதர் கோவிலில் உள்ள பைரவருக்கு பைரவாஷ்டமியினை முன்னிட்டு நாளை ஜெயந்தி விழா நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு நாதஸ்வர கச்சேரியுடன் தொடங்கும் விழாவில், கலச ஆவாஹன பூஜைகள், யாக சாலை வேள்வி பூஜைகள், அதை தொடர்ந்து 64 பைரவர், 64 யோகினி தேவதைகள் பலிபூஜை, கலச ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து பைரவருக்கு, 19 திரவியங்களில் அபி?ஷம், பூஜை, தீபாரனையும் நடக்கிறது. யாக வேள்வி சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.