மேற்கு மாம்பலம்: தொடர் மழையால், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது.சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதில், மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவில் குளம் முழுமையாக நிரம்பி, கோவில் வளாகம் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும், கோதண்டராமர் கோவில் தெருவிலும், மழை நீர் தேங்கியதுடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால், அப்பகுதிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.