திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 108 சங்குகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த அபிஷேகத்தில் ஏராளமானபக்தர்கள் தரிசனம் செய்தனர்.