திண்டுக்கல் : சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற தபால் நிலையங்களில் முன்பதிவு செய்யலாம்என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: தபால் துறை திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் பிரசாத்தை தபாலில் வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரவணப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி, அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பாக்கெட் ஒன்றிற்கு ரூ.450 செலுத்த வேண்டும். முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தினால், 3 நாட்களில் ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கே பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 0451-2432402 ல் பேசலாம், என்றார்.