பழநி கோயிலுக்கு ரூ.32.70 லட்சம் நாட்டு சர்க்கரை கொள்முதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2021 08:12
கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் 32.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்) 60 கிலோ மூட்டை 2900 ரூபாய் முதல் 2950 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம்(மீடியம்) 2800 ரூபாய் முதல் 2880 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான 1384 மூட்டைகளில் 1136 மூட்டைகள் 32.51 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கட்டுபடியாகாத விலையால் எஞ்சிய 248 மூட்டைகளை விவசாயிகள் கிடங்கில் இருப்பு வைத்தனர். தவிர உருண்டை வெல்லம் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் தலா 1500 ரூபாய்க்கு விலைபோனது. வரத்தான 13 மூட்டைகள் (30 கிலோ) 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது .பழநி தேவஸ்தான நிர்வாகம் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை 32.70 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.