பதிவு செய்த நாள்
07
டிச
2021
01:12
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை 3வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது.விருதுநகர் சொக்கநாதர் கோயில், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் சமேத அமுதவல்லி அம்மாள் கோயில்,
ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில், சொக்கர் கோயில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், திருச்சுழி பூமிநாதர் கோயில், சிவகாசி சிவன் கோயில், திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி, சாத்துார் காசி விஸ்வநாதர் கோயில், சிதம்பரேஸ்வரர் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. பால், பழம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.அருப்புக்கோட்டை: அமுதவல்லி அம்பாள் சமேத அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மூன்றாம் சோம வாரத்தை முன்னிட்டு இளநீர் கொண்டு நிரப்பப்பட்ட 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடந்தது. ஸ்வஸ்திக், ஓம் வடிவத்தில் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. அமுத லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.