திருப்பரங்குன்றம் திருக்குளம் சுவர் விழுந்த இடத்தில் மணல் மூடைகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2021 03:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாக லட்சுமி தீர்த்தக்குளத்திற்குள் சுவர் இடிந்து விழுந்த இடத்தில் மணல் மூடைகளை அடுக்கி பாதுகாக்கும் பணி நடந்தது. இக்குளத்தில் சமீபத்தில் மூன்று பக்க மூலைகளிலும் கல் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் திருக்குளத்திற்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.திருக்குளத்திற்குள் மீதமுள்ள கல் சுவர்களை பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சேதமடைந்த பகுதிகளில் தற்போது மணல் மூடைகள் அடுக்கப்பட்டு வருகிறது.