பதிவு செய்த நாள்
09
டிச
2021
01:12
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரில் உள்ள அருள்மிகு கன்னிமூல கணபதி, மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன், நாகராஜர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அனுமதி பெறுதல், நில தேவர் வழிபாடு ஆகியன நடந்தன.
திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதல், மாலை, 4:00 மணிக்கு இறை சக்திகள் வேள்விச் சாலையில் எழுந்தருளல், திருமுறை விண்ணப்பம், அருள் பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தன. செவ்வாய்க்கிழமை திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, கோபுர விமான கலசம் நிறுவுதல், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மூல திருமேனிகளை ஆதார பீடத்தில் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகியன நடந்தன. நேற்று காலை, 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. காலை, 5:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை, 6:00 மணிக்கு வழிபாடு, மூலவர் விமானம், மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடந்தன. தொடர்ந்து, அன்னதானம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணபதி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.