பதிவு செய்த நாள்
09
டிச
2021
01:12
துாத்துக்குடி: தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு,மேல்மருவத்துாருக்கு துாத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள், சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். துாத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச இருமுடி விழா வரும் 13ம் தேதி துவங்கி ஜன. 17ம் தேதி வரை நடக்கிறது. தைப்பூச இருமுடி விழாவில், கலந்து கொள்ள துாத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து, செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியை துாத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் துவக்கிவைத்தார். அதிவேக ரயில்கள் மேல்மருவத்துாரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் பண்டார முருகன், செயலாளர் செந்தில் சுப்ரமணியன், பொருளாளர் கண்ணன், மகளிர் அணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, இளைஞர் அணி செல்லத்துரை, தணிக்கை குழு வேலு, பிரசாரம் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.