திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு நேரம் டிச. 16 முதல் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2021 05:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழியை முன்னிட்டு டிச. 16 முதல் ஜன. 13 வரை நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிகால பூஜைகள் மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி மாத உற்சவ விழாக்கள்: டிச. 11 ல் மாணிக்கவாசகர் காப்புக்கட்டு. டிச. 16 கார்த்திகை. டிச. 18ல் மாணிக்கவாசகர் தேர், ராட்டின திருவிழா, டிச. 20ல் ஆருத்ரா தரிசனம், டிச. 21ல் எண்ணெய் காப்பு திருவிழா துவக்கம். டிச. 25ல் என்னை காப்பு திருவிழா நிறைவு, ஜன. 1ல் 5 மூலவர்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்துப்படி, பூஜைகள், ஜன. 12ல் கார்த்திகை, ஜன.13 ல் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் சுவாமி திருவாட்சி மண்டபத்தில் வலம் சென்று உள் திருவிழாவாக நடைபெறும். என கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.