சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2021 10:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா ஊரடங்கு காரணமாக வெளியில் நடத்த அனுமதி இல்லை என சிதம்பரம் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா இம்மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் உற்சவ விழா நடைபெறும் நிலையில் 19ஆம் தேதி தேர் திருவிழாவும் 20 ஆம் தேதி தரிசனமாகும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தரிசன விழா குறித்து அனைத்து அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார். டிஎஸ்பி ரமேஷ் ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், மற்றும் தீட்சிதர்கள் சார்பில் வெங்கடேச தீட்சிதர் , ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பாலகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக டிசம்பர் 15 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேர் மற்றும் தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என கோட்டாட்சியர் ரவி தெரிவித்தார். அதற்கு அவர்கள் சார்பில் பொதுமக்கள் பங்கேற்று விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இது குறித்து பொதுத் இவர்கள் மத்தியில் முடிவு எடுப்பதாகவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவது எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஆனித்திருமஞ்சனத்தின் போது நடந்த பிரச்சனை இவ்விழாவில் தொடருமோ என அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.