பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
சிவகிரி : வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதசுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலில் ஆனித்திருவிழா தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதசுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும், வீதிஉலாவும் நடந்தது. திருவிழாவின் 9ம் நாளான்று தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் 10ம் திருநாளான்று மண்டகப்படிதாரர் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தாவர்ணம் (தீர்த்தவாரி) நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் திருவீதி உலாவும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அம்மையப்பன் திருவீதி உலாவும் நடந்தது. இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உள்ள சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். பின் மகேஷ்பட்டர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், பெரிய தீபாராதனையும் நடந்தது. தெப்ப தேர் நீராலி மண்டபத்தை 11 முறை வலம் வந்தது. திருவிழாவில் நாடார் உறவின்முறை தலைவர் சமுத்திரம், துணைத் தலைவர் எஸ்.டி.பாலிடெக்னிக், எஸ்.டி.ஹைடெக் பிரிக்ஸ், சூப்பர் மார்க்கெட்டிங் நிறுவனர் தங்கப்பழம், மாகாத்மாகாந்தி சேவா சங்க தலைவர் தவமணி, நாடார் உறவின்முறை பள்ளி கமிட்டி செயலாளர் சமுத்திரவேலு, கணக்கர் பாண்டியநாடார், நிர்வாகிகள் சுப்பிரமணிநாடார், அய்யர்சாமி, திருமலைச்சாமி, பள்ளி தலைமையாசிரியர்கள் குமரேசன், வைகுண்ட கணபதி, எஸ்.டி. பாலிடெக்னிக் தாளாளர் முருகேசன், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்., தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சுடலைமுத்து, செயல் அலுவலர் வைத்திலிங்கம், சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ரோகினி, வள்ளியம்மாள், செயல் அலுவலர்கள், ராமராஜா, அலகுலிங்கேஸ்வரி, இல்லத்து பிள்ளைமார் சமுதாய தலைவர் பொன்மாரியப்பன், மேற்கு மாவட்ட காங்., செயலாளர் போஸ்ராஜா, அதிமுக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கணபதிதேவர், பழனிச்சாமி தேவர், கார்த்திகை சங்க தலைவர் குருமலை, சவுந்தர்ராஜன், தேமுதிக நகர செயலாளர் முருகையா மற்றும் அனைத்து திருநாள் மண்டகப்படிதாரர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், ராதாகிருஷ்ணன், சுலைமான் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெப்ப திருவிழா ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.