சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு இலவச தங்கும் வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 01:12
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு இலவசமாக கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரியமாக பக்தர்கள் பயன்படுத்தி வந்த நீலிமலை பாதை திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.இதைத்தொடர்ந்து பக்தர்கள் சன்னிதானத்தில் அறை எடுத்து தங்க அனுமதிக்கப்பட்டது. ஒரு பக்தர் அதிகபட்சமாக 12 மணி நேரம் சன்னிதானத்தில் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் இலவசமாக தங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை தொடர்ந்து சன்னிதானம் பெரிய நடைப் பந்தல் அருகே உள்ள இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். நேற்று முதல் அன்னதான மண்டபத்தின் மேற்பகுதியில் பக்தர்கள் இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டனர். இங்கு ஐந்தாயிரம் பக்தர்கள தங்கலாம். நீதி மலைப்பாதையில் பக்தர்கள் அதிகமாக வர தொடங்கியுள்ளதால் இங்கு சுகாதாரம் மற்றும்மருத்துவ துறை சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் ஆக்சிஜன் பார்லர்களை திறந்து வைக்கவும் மருத்துவ மனைகள் செயல்படவும் உத்தரவிடப் பட்டுள்ளது.