பதிவு செய்த நாள்
15
டிச
2021
05:12
பழநி: பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயில்களில் தனுர் மாத பூஜை நாளை முதல் துவங்க உள்ளது. பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் நாளை (டிச.16) முதல் மார்கழி மாதம் முழுவதும் தனுர் மாத பூஜை நடைபெற உள்ளது.
அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.அதன்பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 2022, ஜன., 13 வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். 2022 ஜன. 14 அன்று நிறைவு பெறும்.
ஆருத்ரா தரிசனம்: இந்நிலையில் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் டிச., 20 அன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறும்.
சொர்க்கவாசல் திறப்பு: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் வரதராஜ பெருமாள் கோயில் களில் 2022- ஜன. 3 லிருந்து பகல் பத்து உற்சவம் துவங்கும். 2022. ஜன. 13ல் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4:00 மணிக்கு நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.