பதிவு செய்த நாள்
16
டிச
2021
06:12
சென்னை:ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில் இருந்து, காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக, கேரள மாநிலம் கொல்லத்துக்கு, சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. *இந்த ரயில், காக்கிநாடா டவுன் நிலையத்தில் இருந்து, இன்று இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:45 மணிக்கு கொல்லம் சென்றடையும் *கொல்லத்தில் இருந்து, வரும் 18ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு காக்கிநாடா டவுன் நிலையம் சென்றடையும்.முன்பதிவில்லா ரயில்கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழநி வழியாக திருச்செந்துாருக்கு முன்பதிவில்லா ரயில், இன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் பாலக்காட்டில் அதிகாலை 4:55 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3:45 மணிக்கு திருச்செந்துார் சென்றடையும். திருச்செந்துாரில் இருந்து, மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை உட்பட 31 நிலையங்களில் நின்று செல்லும். எட்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு லக்கேஜ் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். சூப்பர் பாஸ்ட் ரயில்ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு, ஹம்சாபர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், அஜ்மீரில் இருந்து வரும் 18ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு 20ம் தேதி இரவு 9:00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து, டிசம்பர் 21 முதல் செவ்வாய் தோறும் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு 23ம் தேதி இரவு 11:05 மணிக்கு அஜ்மீர் சென்றடையும். ஏற்கனவே இயக்கப்பட்ட இந்த ரயில், கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது.