மேட்டுப்பாளையம்: மார்கழி மாதம் பிறந்த இடத்தை காரமடையில் திருப்பாவை பஜனை வழிபாடு துவங்கியது. காரமடையில், மார்கழி மாதம், 30 நாட்களும், அரங்கநாதர் கோவிலைச் சுற்றி பஜனை குழுவினர் பாடல்களை பாடுவர். நேற்று மார்கழி மாதம் பிறந்ததை அடுத்து, காலையில் பஜனைக் குழுவினர், பஜனை பாடல்களை பாடினர். காரமடை தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவை பஜனை வழிபாட்டுக் குழுவினர், கோவிலைச் சுற்றி, தேர் செல்லும் வீதிகளில், திருவிளக்குகள் வைத்து, பஜனை பாடல்களை பாடினர். இதேபோன்று திருமுருக பக்தர்கள் குழுவினர் உட்பட பஜனைக் குழுவினர், காரமடையில் பஜனை பாடல்களை பாடினர். இக்குழுவினர் வருகையை எதிர் கொண்டு அழைக்கும் விதமாக, நான்கு வீதிகளில் பக்தர்கள் கோலமிட்டு குழுவினரை வரவேற்பர். இதில் ஏராளமான பக்தர்களும் பங்கேற்பர்.