புதுச்சேரி-முருங்கம்பாக்கம் சமரச சன்மார்க்க ஸ்ரீராமாநுஜ பஜனை மட கோவிலில் மார்கழி மகோற்சவம் நேற்று பஜனை ஊர்வலத்துடன் துவங்கியது.முருங்கம்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக நடந்த பஜனையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மூன்றாம் சனிக்கிழமை வரை பஜனை ஊர்வலம் நடக்க உள்ளது.அடுத்த மாதம் 10ம் தேதி பின்னமர சேவை, ஆண்டாள் திருக்கல்யாணம், 12ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கின்றது. ஏற்பாடுகளை சமரச சன்மார்க்க ஸ்ரீராமாநுஜ பஜனை மட கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.