பழநி கோயில் வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 04:12
பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. புழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் வேத சிவாகம பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15.01.2022 தேதியன்று 12 முதல் 16 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் 5 ஆண்டுகள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் 15.01.2022. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலும் மற்றும் www.hrce.tn.gov.in, www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். இந்த வேத சிவாகம பாடசாலையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.