திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
விழாவை முன்னிட்டு, நாளை (19ம் தேதி) இரவு 8 மணிமுதல் 10மணி வரை நடராஜருக்கு நடராஜர் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 4.30 மணி முதல் நடராஜர் பாத தரிசணம் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை ஜோதி டிவி நேரலையில் ஒளிபரப்புகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.