பதிவு செய்த நாள்
18
டிச
2021
04:12
அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா நடந்தது. அன்னூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 52ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் வேள்வி பூஜை நடந்தது. இன்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், கரும்புச்சாறு, இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் உள்பட, 19 வகை திரவியங்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை 11:30 மணிக்கு, யானை, குதிரை, செண்டை மேளம், ஜமாப், கேரள பூ காவடி மற்றும் ஐயப்ப பக்தர்கள் பஜனையுடன், புலி வாகனத்தில், சுவாமி திருவீதியுலா அன்னூரின் முக்கிய வீதிகளின் வழியாக நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.