உலக நன்மை வேண்டி எல்லையம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2021 04:12
காரைக்கால்: காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உலகநன்மை வேண்டி எல்லையாம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிப்பட்டனர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாதத்தையொட்டி உலக நன்மைவேண்டி எல்லையம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிப்பட்டனர். இக்கோவிலில் மீனவமக்கள் நலன்கருதி பக்தர்கள் ஆண்டுதோறும் நெற்றுகடன் செலுத்தி வருகின்றனர்.இதனால் நேற்று காலை 200க்கு மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் ஆண்கள் பால்குடம் எடுத்து கிளிஞ்சல்மேட்டில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜைசெய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கிளிஞ்சல்மேடு மீனவகிராமத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.