திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராட்டின திருவிழா நடந்தது.
இக்கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் டிச.,11 துவங்கியது. தினமும் மாலை திருவாட்சி மண்டபத்தை பல்லக்கில் மாணிக்கவாசகர் மூன்று முறை வலம் சென்று எழுந்தருள, ஒதுவரால் திருவெம்பாவை 24 பாடல்கள் பாடப்பட்டன. நேற்று இரவு கோயிலுக்குள் கண்ணூஞ்சல் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள் புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடந்தது. கொரோனா தடையுத்தரவால் நேற்று காலை மாணிக்கவாசகர் கிரிவலம் ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு நடந்தது.கோயில் முன் நடக்கவேண்டிய ராட்டின திருவிழாவும் கோயிலுக்குள் நடத்தப்பட்டது.