திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2021 04:12
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 3 தீர்த்தம், 3 மூர்த்தி, 3 விருட்சங்களை கொண்ட திருத்தலமான இங்கு நவகிரகங்களில் புதன் பகவானும் சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற இத்தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்வேதகேது என்ற எட்டு வயது குழந்தைக்காக சிவபெருமான் ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பள்ளயத்தில் சக்கரை பொங்கல், திருவாதிரை களி, வடை வைத்து படையில் இடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது பூஜையறை வினோத் சங்கர் கணேஷ் மற்றும் ராஜப்பா குருக்கள் செய்து வைத்தனர். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.